வெள்ளி, 24 ஜனவரி, 2014

எழிலனும் ஒரு அரசியல் பிரிவு அங்கத்தவராக எல்.ரீ.ரீ.ஈயின் பதவிகளில் உயர்ந்து கொண்டே வந்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வனின் ஒரு முக்கிய பிரியத்துக்கு உரியவராக இருந்தார்.
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் தமிழ்செல்வன் எழிலனை வவுனியா மாவட்ட  அரசியல் பெறுப்பாளராக நியமித்தார். 2002ல்  யுத்த நிறுத்த  ஒப்பந்தம்  அமலுக்கு வந்ததன் பின்னர், அரசியல் ரீதியாக உணர்ச்சி மிகுந்த  திருகோணமலை  மாவட்டத்திற்கு  எல்.ரீ.ரீ.ஈயின் அரசியற் பொறுப்பாளராக எழிலன் மாற்றம் செய்யப்பட்டார்.
2004க்குப்  பிறகு ஒஸ்லோவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் முறிவடையத் தொடங்கியது. இறுதியான முடிவை மேற்கொள்ளும் திருப்புமுனையான கட்டம்  திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிராந்தியத்தின் மாவிலாறு ஆற்றின் நீரை  சிங்களவர் குடியிருக்கும் பகுதிக்கு செல்லவிடாது எல்.ரீ.ரீ.ஈ தடுத்தபோது ஏற்பட்டது.
இது 2006 ஜூலலையில் நடந்தது. இந்த முடிவை நியாயப்படுத்துவதில் எழிலன் ஒரு முக்கியமான பங்கினை வகித்தார், அவர் மாவிலாறு ஆற்றினைப் பற்றியும் நீரைத் தடுப்பதன் முக்கிய நோக்கம் பற்றியும் ஊடகங்களுக்கு பல நேர்காணல்களை வழங்கியிருந்தார். அதனால் அவர் மாவிலாறு எழிலன் என அனைவராலும் அறியப்படலானார். மாவிலாறு அரங்கத்தினால் விரிவடைந்த போர், இறுதியாக முள்ளிவாய்க்காலில் தோல்வி என்கிற முடிவினைத்தந்தது.
எழிலன் மற்றும் ஆனந்தி ஆகியோர் 1998 ஜூன் 6ல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் திருமணம் செய்து கொண்டார்கள்.  எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவுத்   தலைவர் தமிழ்செல்வன் இந்த திருமணத்துக்குத் தலைமை தாங்கினார். எழிலன் வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நிலை கொண்டிருந்தபோதும் அந்த நேரங்களில் ஆனந்தி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எழிலன் மற்றும் இதர எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அனைவரும் வடக்கின் வன்னிக்கு குடிபெயர்ந்தார்கள். கிளிநொச்சியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ செயலத்தில் எழிலன் பணியாற்ற ஆரம்பித்தார். ஆனந்தி கிளிநொச்சி கச்சேரியில் பணியாற்றியபடி தனது கணவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.
ஆனந்தி, எழிலன் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள்,மூவருமே பெண்கள். மூத்தவள் நல்விழி 1999 மே 23ல் பிறந்தாள். இரண்டாவதான எழில்விழி, 22 நவம்பர் 2001லும் இளையவளான கயல்விழி 2003 ஜூலை 15லும பிறந்தார்கள்.
கிளிநொச்சி
இராணுவம் முன்னேறியதை தொடர்ந்து குடும்பம் கிளிநொச்சியை விட்டு முல்லைத்தீவுக்கு நகர்ந்தது. 2009ல் போர் முடிவடைந்ததும், ஆனந்தியும் பிள்ளைகளும்  சிறிது காலம் உள்ளக இடம் பெயர்ந்தவர்கள் முகாம்களில் இருந்ததின் பின்னர் கிளிநொச்சியில் குடியேறினார்கள், கிளிநொச்சி    மாவட்டச் செயலகத்தில் உள்ள சமுர்த்தி   திணைக்களத்தில் நிருவாக உதவியாளராக ஆனந்தி தனது கடமையை மீண்டும் பொறுப்பேற்றக் கொண்டார்.
பிள்ளைகள் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரத்துக்கு அனுப்பப்பட்டார்கள் தாய் இரண்டு இடங்களிலும் மாறிமாறி பயணம் செய்து கொண்டிருந்தார். கிளிநொச்சியில் வைத்துத்தான் ஆனந்தி சிறிதரனின் பேச்சுக்கு கட்டுப்பட்டார், எல்.எல்.ஆர்.சி க்கு முன்னால் சாட்சியம் அளிக்கும்படி சிறிதரன் ஆனந்தியை ஊக்கப் படுததினார்.
ஊடகங்களுக்கு அப்பால் எல்.எல்.ஆர்.சி யின் நடவடிக்கைகள். காணமற் போனவர்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்களில் அக்கறையுள்ள பல அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் என்பனவற்றின் கவனத்தையும் ஈர்த்தன.
ஆனந்தி அவற்றுடன் அதிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். சில தொண்டு நிறுவனங்கள் காணாமற போனவர்களின் குடும்பத்திலுள்ள பெண்களை அணிதிரட்டி அவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு பயன்படுத்த ஆனந்தி பேருதவியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டன.
ஏனைய நிறுவனங்கள் அவரைக் கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என நம்பிக்கை கொண்டிருந்தன.  மற்றும் சில அவரை தங்கள் வெற்றிக் கோப்பையாக காட்சிப்படுத்த விரும்பின. ஆரம்பத்தில் அவர் இந்த நிறுவனங்களுடன் சேர்ந்திருந்தார்  ஆனால் விரைவிலேயே   ஆனந்திக்கு ஒரு சுயாதீனமான நிகழ்ச்சித் திட்டம்   இருக்கிறது மற்றும் மற்றவர்களுக்கு கீழ் இருந்து ஒத்து ஊத அவர் தயாரில்லை என்பது வெளிப்படையாக தெரியவந்தது. இந்த நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதின் விளைவாக ஆனந்தி மற்றும் தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் காணாமற்போனதாகச் சொல்லப்படும் வேறு சில பெண்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இப்போது ஆனந்தி காணாமல்போன அல்லது   தவறிப்போன குடும்பம்   மற்றும் பெண்கள் தொடர்பான  தொண்டு  நிறுவன செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். அவர் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து  பாரிய ஊடக கவனத்தை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.
இதன் விளைவாக அதிகார வாக்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்டு வரும் சில ஆர்வலர்கள்,  தாங்கள் செய்யும் திட்டச் செயற்பாடுகள் யாவும் புறக்கணிக்கப்படும் அதேவேளை, ஆக்கபூர்வமான உள்ளீடுகள் எதுவுமின்றி விளம்பரம் தேடிக் கொள்கிறார் என ஆனந்திமீது குற்றம் சாட்டுகிறாhகள்.   இதனால்..  ஆனந்திக்கும் இவர்களுக்கும் இடையில் சில புகைச்சல்கள் எழுந்துள்ளன. ஒரு புலித் தலைவரின் மனைவி மனித உரிமைகளின் காவலராக தன்னை காணபிக்கிறாரே என்கிற சீற்றமும் சில வட்டாரங்களில் கிளம்பியுள்ளன.
ஆனந்தி சில தொண்டு நிறுனங்களுடன்  உறவுகளை நினைத்தபடி மாற்றிக் கொண்டு வருகிறார்.  தனக்கு பொருத்தமானபடி நிறுவனங்களுடன் சில நேரங்களில் இணைந்தும் சில நேரங்களில் விலகியும் இருந்து வருகிறார் மற்றும் அவரது முன்னாள்  தோழர்கள் அவருடன்  ஏற்பட்ட சில பிணக்குகளின் பின் அவரைப்பற்றி புறம் சொல்லித் திரிகிறார்கள். தங்களது சுயநல நோக்கங்களுக்காக அவரைப் பயன்படுத்தி பல வழிகளிலும் உதவிகளைப் பெற்றதாக ஒரு முன்னணி தொண்டு நிறுவன ஆர்வலர் மீதும் ஆனந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

சுவிட்சலாந்து
ஆனந்தி மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட அதைப்பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்லும் வழிகளுக்கான முயற்சியையும் ஆரம்பித்திருந்தார். அவர் பயன்படுத்திய வழிகளில் ஒன்று சுவிட்சலாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோர அவர் செய்த முயற்சியாகும். எல்.எல்.ஆர்.சி முன்னால் ஆஜராகிய பின்னர் தான் துன்புறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்கிற காரணத்தை அவர் கூறியிருந்தார்.
ஸ்ரீலங்காவில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட இந்த புகலிட விண்ணப்பம் சுவிஸ் அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டது. பி ன்னர் ஜெனிவாவுக்கு சென்று, ஐநா மனித உரிமைகள் சபைக்குப் பக்கத்தில் ஒரு தொண்டு நிறவனம் அனுசரணை வழங்கியிருந்த ஒரு கூட்டத்தில் பங்கு பெறுவதற்கான ஒரு வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆனந்தி முன்னர் சுவிட்சலாந்தில் தஞ்சம் கோரி விண்ணப்பித்து அது நிராகரிக்கப் பட்டிருந்த காரணத்தால், சுவிட்சலாந்துக்குள் நுழைவதற்கான விசா அவருக்கு வழங்கப்படவில்லை. அவருடைய ஜெனிவா நம்பிக்கை இப்படியாக முடிந்து போனது.
வட மகாணசபைக்கான தேர்தல்கள் நடப்பது  நிச்சயம் என உறுதியான பின்னர் வாய்ப்புக்கான மற்றொரு கதவு அவர்முன் விரியத் திறந்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ரி.என்.ஏ யின் வலுவான மனிதருமான  மாவை என்கிற சோமசுந்தரம் சேனாதிராஜா   ஆனந்தியை அணுகி அவரை   ரி.என்.ஏ வேட்பாளராக போட்டியிடும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு ஆனந்தி உடனடியாகவே சம்மதம் தெரிவித்தார்.
அதன் பின்னர் ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவரது முயற்சிக்கு ஆட்சேபணை தெரிவித்ததால் ஆனந்தி விடயம் தொடர்பாக ஒரு இரண்டாவது எண்ணம் மாவையின் மனதில் முளைவிடத் தொடங்கியது. அதன்பின்னர் ஆனந்தி சார்பாக சிறிதரனின்   தலையீடு வந்தது.   சிறிதரனின்  உறுதிப்பாட்டால் பலம் பெற்ற  சேனாதிராஜா சம்பந்தனின்   ஆட்சேபணைகளை அலட்சியம் செய்து எழிலனின் மனைவி ஆனந்திக்கு யாழ்ப்பாணத்துக்கான ரி.என்.ஏ வேட்பாளராக நியமனத்தை வழங்கினார்.
இந்தப் பத்திகளில் முன்னர் தெரிவித்தபடி வட மாகாணசபைக்கான தேர்தல் ரி.என்.ஏ க்குள் தீவிர   வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வழி வகுத்தது. முன்னாள் தலைமை   நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளருக்கான ஏகமனதான தெரிவு என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டாலும்கூட, சேனாதிராஜாவை வேட்பாளர் ஆக்குவதற்கான பரவலான ஆதரவு கட்சிக்குள் இருந்தது.
இது ஒற்றுமை என்கிற முகப்பின் கீழ் திரைமறைவில் பல சதிகளுக்கு வழி ஏற்படுத்தியது. விக்னேஸ்வரனுக்கு எதிரான அடிமட்டத்தில் தோன்றும் மனக்கசப்புக்கள் நிலவத்தான் செய்தன. விக்னேஸ்வரனுக்கு எதிரான இந்த பகைமைத் தீக்கு புலம் பெயர் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் சிலர் நன்றாக எண்ணெய் ஊற்றினார்கள்.
விருப்பத்தெரிவுகள்
இது விக்னேஸ்வரனுக்கு பகையான சக்திகள் ஒன்றுசேர்வதற்கு ஒரு வழி சமைத்தது. அவர்களின் திட்டம் என்னவென்றால் மற்றொரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பெருகச் செய்து அந்த நபர் விக்னேஸ்வரனைக் காட்டிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெறச் செய்வது என்பதாகும். இது விக்னேஸ்வரனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். அதன்படி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவருக்குத்தான் முதலமைச்சர் பதவியை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பவும் முடியும்.
ஆரம்பத்தில் அதற்காக முன்னாள் யாழ் மாநகரசபை ஆணையாளர் சிவிகே. சிவஞானம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் விருப்பு வேட்பாளருக்கான முடிசூட்டிக்கொள்ளத் தகுதியான வேட்பாளர்களாக ஆலோசிக்கப் பட்டார்கள். இறுதியாக அதற்கு சாதகமான வேட்பாளராக ஆனந்தி சசிதரனை குறிகாட்டி தேர்வு செய்தது. ஒரு மூன்று பிள்ளைகளின் தாய் அவரது கணவர் காணாமற் போயுள்ளார். எனவே ஆனந்தி பெண்கள் இடையே கவனத்தை கவருவார் என எண்ணப்பட்டது.
தவிரவும் ஒரு மனைவி தனது கணவனின் உயிருக்காக போராடுவது அல்லது அவர் சார்பாக நீதி கோருவது தமிழ் மனங்களில் அனுதாப அலைகளை எழுப்பும். இது தொடர்பான   இந்துமத இதிகாசக் கதையில் சாவித்திரி மரணத்தை ஏற்படுத்தும் கடவுளான   எமனை தடுத்து நிறுத்தி தனது கணவனான சத்தியவானை உயிர்த்தெழ வைப்பதில் வெற்றி கண்டுள்ளாள்.
தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம், பத்தினித் தெய்வமான கண்ணகி தனது கணவனான கோவலன், பாண்டிய அரசனால் கொல்லப்பட்டதுக்கு நீதி கேட்டுப் போராடி, அது கிடைக்காததால் மதுரை மாநகரை தீயிட்டு கொளுத்திய வரலாற்றை சொல்கிறது. அந்தப் பின்னணியில் ஆனந்தியை இந்த நாட்களின் சாவித்திரி மற்றும் கண்ணகி ஆகியோரின் கூட்டான ஒரு பெண்ணாக சித்தரிக்க முடியும்.
ஒரு புறத்தில் விக்னேஸ்வரனுக்கு குழிபறிக்க நினைப்பவர்கள் ஆனந்திக்கு பின்துணை நல்கும் அதேவேளை மறுபுறத்தில் புலிகளின் தீவிர ஆதரவு சக்திகள் மற்றொரு காரணத்துக்காக அவருக்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருந்தது. எழிலனின் மனைவியாக உள்ளதால் அவர் புலிகளுடன் இருப்பதாக இனங்காணப்படுவார்.
அவர் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் முன்னிலை பெற்றால்,அப்போது அந்த வெற்றி புலிகளின் வெற்றியாக சித்தரிக்கப் படுவதுடன் எல்.ரீ.ரீ.ஈக்கும் நீதி கிடைக்கும். அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களின் மூன்றாவது பகுதியினரின் சிந்தனை என்னவென்றால் தங்களது ஆதரவை ஆனந்திக்கு வழங்குவது எதனாலென்றால் அவரது வெற்றி, உலக அபிப்ராயம் என்கிற தீர்ப்பாயத்தின் முன் ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிரான குற்றப் பத்திரத்தை தேடும் சர்வதேச சக்திகளின் கரத்தை பலப்படுத்தும்  என்பதற்காக என்றிருந்தது.
பிரச்சாரம்
அதன்படி ஆனந்தி சசிதரனின் தகுதியை அதிகரிக்கச் செய்து அதிகபட்ச விருப்பு வாக்குகளை அறுவடை செய்வதற்காக நன்கு ஆதரவு தேடும் பிரச்சாரத்துக்கான மேடை தயார் செய்யப்பட்டது. அபரிமிதமான பத்திரிகை விளம்பரங்கள், கண்ணைக்கவரும் வர்ணச் சுவரொட்டிகள், ஆனந்தி சார்பான ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கொடிகள் என்பன நாளாந்தம் வெளிவருவது வழக்கமாக இருந்தது.
ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட வகனங்கள் நவீன தமிழ் தேசியப் பாடல்கள் மற்றும் சுலோகங்களை  முழக்கியவாறே ஆனநதிக்கு ஆதரவு தேடி யாழ் வீதிகளை வலம் வந்தன. ஆனந்தியின் பெயர், முகம் மற்றும் வேட்பாளர் இலக்கம் என்பன பொறித்த ரீ-சேட்களை அணிந்த இளைஞர் பட்டாளம் உந்து வண்டிகளில் உலா வந்தார்கள்.
ஆனந்திக்காக வேலை செய்யும் தொணடர்களுக்காக உணவு சிற்றுண்டிகள், போக்குவரத்து என்பனவற்றுடன் நாளொன்றுக்கு 500 ரூபா பணமும் கொடுப்பனவாக வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மறைவான சில கரங்கள் அந்தப் பிரச்சாரங்களுக்கு நிதி வழங்கியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. வெளிநாட்டிலுள்ள தனது உறவினர்கள் தனக்கு உதவி செய்வாக ஆனந்தியே மக்களிடம் கூறியுள்ளார்.
விக்னேஸ்வரனுடைய பின்துணையாளர்கள் மற்றும் ஆனந்தியின்  ஆதரவாளர்கள் இடையேயான பனிப்போர் பிரச்சாரத்தின் போது விரிவடைவதைக் காணக்கூடியதாக இருந்தது. விக்னேஸ்வரன் தோன்றும் அதே மேடையில் அவருடன் ஆனந்தி தோன்றாமல் தடுப்பதற்கு மிக் கவனமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஒரு மேடையில் விக்னேஸ்வரன் வருவதற்கு முன்பாகவே ஆனந்தி தனது பேச்சை முடித்துக்கொண்டு வேறு மேடைக்கு செல்லத் தக்க விதத்தில் நிகழ்ச்சித் திட்டங்கள் வகுக்கப் பட்டிருந்தன. இறுதிச் சுற்று கூட்டம் முடிவுறும் வரைக்கும் இந்த நடைமுறை தொடர்ந்தது. மேலும் தேர்தல் மேடைகளில் பேசுவதற்கான நேரம் ஆனந்திக்கு போதாமல் இருந்தது,ஆனால் ஒரு சாதாரண செய்தியை வெளியிடுவதன் மூலம் அவர் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதைச் சமாளித்தார்.
ஆனந்தி சசிதரன் தன்னை எழிலனின் மனைவி என்று அறிமுகம் செய்தார். பின்னர் அவர் தனது கணவரும் ஏனைய மூத்த புலித் தலைவர்களும் எவ்வாறு சரணடைந்து பின் காணாமற் போனார்கள் என்பதை விளக்கினார். தனது பிள்ளைகளுக்கு தகப்பன் இல்லை எனக்கு இப்போது கணவர் இல்லை என்று அவர் சொன்னார்.
என்னைப்போல பலர் உள்ளார்கள் என்ன நடந்தது என்கிற உண்மையை என் சார்பாகவும் மற்றும் என்னைப் போன்றவர்கள் சார்பாகவும் கண்டுபிடிக்க விரும்புகிறேன். தான் தெரிவானால், தான் நீதிக்காகப் போராடப் போவதாகவும் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனையை எதிர்கொள்ள வைக்கப் போவதாவும் அவர் சொன்னார்.
எனவே மக்கள் குறிப்பாகப் பெண்கள் நிச்சயம் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சாதாரண பேச்சு   மிகவும் பயனுள்ளதாக இருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ரி.என்.ஏ வேட்பாளர்களில் ஆனந்தி மட்டுமே ஒரேயொரு பெண் வேட்பாளராக இருந்ததும் ஒரு தற்செயலான சம்பவம். அதுவும் கூட அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
-   டி.பி.எஸ்.ஜெயராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக