திங்கள், 3 மார்ச், 2014

இன்று அம்பாள் சனசமூகநிலையத்தில் இடம்பெற்ற நூலக அங்குரார்ப்பண நிகழ்வின் காட்சிகள் ஒரு சில இன்று காலை 9 மணியளவில் ஆரம்பித்த, நூலகத்தில் வைக்கப்படவுள்ள நூல்களின் கண்காட்சியை இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்களும், பல எமது கிராம, அயற்கிராம இளைஞர் யுவதிகளும், சில முதியவர்களும் பார்வையிட்டனர். முப்பதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிப்பினால் ஏற்படும் நன்மைகள், நூலகத்தின் பயன்பாடு என்பன தொடர்பாக ஒலி பெருக்கியில் உரையாற்றியதுடன், அங்கிருந்த நூல்களில் இருந்து தமக்கு விருப்பமான கதைகள், கவிதைகளையும் ஒலிபெருக்கியில் வாசித்துக் காட்டினர். பி.ப 4 மணியில் இருந்து ஆரம்பமான நூல் இரவல் வழங்கும் செயற்பாட்டில் ஐம்பது வரையான பிள்ளைகள் தங்களைப் பதிவு செய்து புத்தகங்களை இரவல் பெற்றுச் சென்றனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக