திங்கள், 26 மே, 2014

எமது கிராமத்து நூலகங்களுக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கித் தந்தையின் பிறந்த நாளைச் சிறப்பித்த பிள்ளைகள். திரு கனகசபை பாஸ்கரன் அவர்களின் 50 ஆவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முகமாக எமது கிராமத்தில் அமைந்துள்ள பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நூலகம் மற்றும் மறுமலர்ச்சி மன்ற நூலகம் ஆகியவற்றுக்கு அவரின் பிள்ளைகள் ரூபா 10 000 பெறுமதியான நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்குத் தயார்ப்படுத்த உதவும் கடந்த கால வினாவிடை நூல்கள் இவ் அன்பளிப்புள் பிரதான இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அந் நூற் தொகுதியின் ஒரு பகுதியை இங்கு காணலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக