அறிவித்தல்

அழகு தேவதை...


சிந்திச்சு செயல்படுவோம் ஊரை வளப்படுத்துவோம்,இந்த ஆக்கத்தில் வரும் நல்லவற்றை நடைமுறை படுத்தி இல்லாததை உருவாக்குவோம் ............
ஆலயக்கட்டுமானங்கள் சம்பில்த்துறைசுடலைவரை. பணிப்புலம் வாழ் மக்களின் சாதனைப்பட்டியலில் இலங்கையிலேயே அதிக ஆலயங்கள் கட்டிய சாதனையை பணிப்புலம் தட்டிச்சென்றுள்ளது.எமது ஊரில் அம்மன்,முருகன்,சிவன்,பிள்ளையா
ர்,சிவன்கோயில் இவை முக்கிய தலங்கள் இது அவசியமானவையே.இந்த ஆலயங்கள் தவிர பணிப்புலத்திலும் அதன் சுற்றாடல் சிற்றூர்களிலும் இருக்கும் ஆலயங்கள் பின்வருமாறு. 1, சாந்தை காளிகோயில் 2, சாந்தை மாதாகோயில் 3, சில்லாலை வயிரவர்கோயில் 4,அம்மன்கோயில்வடக்குசாந்தை5, கலட்டி வயரவர்கோயில் 6,செட்டிகுறிச்சி காடேறிகோயில் 7,சாந்தைசித்திவினாயகர்கோயில்8,காலையடிமுருகன்கோயில் 9,காலையடிவயிரவரகோயில் 10,காலையடிசிவன்கோயில் 11,காலையடிதெற்க்குவயிரவர்கோயில் 12,வெற்றிமடம் (கோயிலாக்க முயற்ச்சி) 13,காலையடிஅம்மன்கோயில் 14,காலையடிவயிரவர்கோயில் 15,குஞ்சம்கலட்டிவயிரவர் 16,கமலாவீட்டடியில்வயிரவர் 17.ராசேந்திரம்வீட்டடிவயிரவர் 18,காடேறிவயிரவர்கோயில் 19,சிவன்கோயில். 20,பணிப்புலம்அம்மன்கோயில். 21,ஜயனார்கோயில். 22,கலட்டிவிறுமர்கோயில் தெய்வானைவீட்டடி, 23.சம்பில்சுடலையடி சம்பூதீஸ்வரர்கோயில். இவை எமது ஊரில் இருக்கும் கோயில்கள்.எமது ஊரில் இருக்கும் பாடசாலைகள் பின்வருமாறு. 1,சாந்தைசிற்றம்பல வித்தியாசாலை. 2,சாந்தைபாலர்பாடசாலை. 3,காலையடி அமெரிக்கன்மெசின் தமிழ்கலவன்பாடசாலை. 4,சிறீமுருகன்பாலர்பாடசாலை. 5,பணிப்புலம்சனசமூகநிலையம் பாலர்பாடசாலை. 6,சிவன்கோயில்பாலர்பாடசாலைசைவசமயபாடசாலை. 7,ஆறுமுகவித்தியாசாலை. இவைகளே எமது ஊர் பாடசாலைகளாகும். எமதுஊரில் இருக்கும் சமூகமுன்னேற்றத்திற்க்கான சங்கங்கள். 1,பணிப்புலம்சனசமூகநிலையம். 2,பணிப்புலம்கிராமமுன்னேற்றச்சங்கம்.(கட்டிடம்எதுவும்கிடையாது) 3,சாந்தைசனசமூகநிலையம் 4,சாந்தைகிராமமுன்னேற்றசங்கம்(கட்டிடம்எதுவும்கிடையாது) 5,மறுமலர்ச்சிமன்றம்காலையடி. 6,சிறீமுருகன்விளையாட்டுகழகம்7,மறமலர்ச்சி மன்ற நூல்நிலையம். இவை மட்டுமே சமூகமுன்னேற்றத்திற்க்கான சங்கங்கள்.எமது ஊரில் தொழிற்ச்சாலைகள் இல்லை.தொழில்முயற்ச்சிகள் எதுவும்இல்லை.சமூகம் சார் பாடசாலை வளர்ச்சி சம்மந்தமான முயற்ச்சிகள் உண்டா என்றால் அதுவும்பூச்சியமே.பணிப்புலத்தில்தற்ப்போதைய முயற்ச்சிகளில் முன்நிலையில் நிற்ப்பது சகல ஆலயங்களையும் புனர்நிர்மான செய்வதே.4 பெரியகோயிலும் புனர்நிர்மானம் தேவையே.இதைத்தவிர்ந்து மூலை முடக்கில் இருக்கும் சகல ஆலயங்களும் புனரமைப்புக்கள் ஆரம்பிக்கிறார்கள் இது எமது ஊருக்கு தற்ப்போதைய அவசரதேவையாகும், அதாவது பூசகர்கள் தொழில்விருத்தி அவர்களுடைய வேலைவாய்ப்பை கருத்தில் கொண்ட சமூக ஆர்வலர்கள் முயற்ச்சிகள் இது வெற்றிபெற பல புலம்பெயர் மக்கள் நிதிவளங்குகிறார்கள் இதன் பலாபலன்களால் பூசகர்களுக்கு வேலைவளங்கல் பூர்த்தி செய்யப்படுகின்றன.எமது இந்தமுயற்ச்சி சம்பில் சுடலைவரை சென்று சம்பூதீஸ்வரர் ஆலயத்தை கட்டி வெகுவிரைவில் கும்பாஅபிஷேகம் செய்யும் முயற்ச்சியில் இராப்பகலாக நித்திரையும் இல்லாமல் உழைக்கிறார்கள்.இந்த சமூக ஆர்வலர்கள் உழைப்பு சொல்லிப்போற்றும் அளவுக்கு இவர்கள் முயற்ச்சிகள் ஐயகோ.வெகுவிரைவில் மன்றத்து வளவிலும் ஒரு முருகன் ஆலயம்கட்ட மந்திர ஆலோசனைகள் செய்கிறார்கள்.மன்றத்தின் வளவு நடுப்பகுதியில் ஒரு பிரமாண்ட ஆலயம்கட்டி அதை முடிக்க சமூகசிந்தனையாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,பல திட்டங்களை போடுகிறார்கள்.வாசிகசாலையைஇடித்துவிட்டு அதில் ஒரு ஐயப்பன் கோயிலையும் கட்டலாம் என இந்த சமூக ஆர்வலர்திட்டம்.இதைவிட சமூகமுன்னேற்றத்தின் எமது ஊரவர் நீண்ட தொலைநோக்கம் கொண்டே ஆலயங்களை அமைக்கிறார்கள் இந்த ஆலயங்களால் எதிர்காலத்தில் மேற்க்கு நாட்டுமக்கள் எமது ஊரின் மகிமைகளை அறிந்து அவர்களது உல்லாசப்பயணத்தை எமது ஊரநோக்கி படைஎடுப்பார்கள் நிறைய அந்நியச்செலவாணி எமது ஊருக்கு கிடைக்கும் என்ற ஒரு நல்ல நோக்கமும் சிறந்த திட்டமிடல்.இதைவிட எமது நாட்டவர்களே உல்லாசப்பயணம் வரலாம் என எண்ணியே திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்.நமது ஊர் இவர்களை எம்மண்ணின் செல்வங்களாய் பெற்றது எமது ஊரவர்கள் பெருமைப்படவேண்டும்.என்ன பாக்கியம் செய்தோமோ என்னால் கூற வார்த்தைகள் வர மறுக்கிறது.இது எமது ஊரின் சாதனைப்பட்டியல்.இவர்கள் எம்மிடம் எதிர்பார்ப்பது நிதி மட்டுமே அதற்க்காக நீங்கள் இவர்களுக்கு ஆலோசனைமட்டும் சொல்லவேகூடாது.ஏன் என்றால் அவர்களுக்கு அலர்ஜியாம்.பணம்மட்டும் நாங்கள் உழைத்து அனுப்ப அனுப்ப அவர்கள் ஆலயங்களை கட்டு கட்டு கட்டுவினமாம்.நீங்கள் ஊருக்குபோனால் சாமிதூக்கலாம்,திருவிழாச்செய்யலாம்,தேரில்ஏறி ஊர்வலம வரலாம்.இதில் நீங்கள் பணம்கொடுத்துவிட்டு கேள்விகள் கேட்க்கக்கூடாது,கணக்குகேட்க்கக்கூடாது.இவை இரண்டும் செய்தால் உங்களுக்கு சாமிதூக்கவோ,தேரில்ஏறவோ அனுமதி இல்லை.இன்று எமது ஊரின் வளர்ச்சிக்காய் எமது புலம்பெயர் அமைப்புக்கள் வீணாக திட்டங்கள் போடுகிறார்கள்.நீங்கள் பணம்மட்டுமே சேர்க்கவேண்டும் அதை ஊருக்கு அனுப்புவோமாம் அங்குள்ளவை என்னவும் செய்வினம் நீங்கள் வாயேதிறக்கப்படாது.இன்று பணிப்புலம் மக்கள் சுடலைவரை தம் சாதனையை கொண்டுசென்றுள்ளனர்.சம்பில் சுடலையோடு ஆலயம்கட்டும் திட்டங்களை எரிக்கவேண்டும்.சாந்தைபிள்ளையார், இடுமன்கோயில்,சிவன்கோயில் இவைபொதுஆலயங்கள் அதன் நிர்மானம் அவசியமே.தெருக்கோடியின் ஆலயம் போய் சுடலைவரைபோன இவர்கள் எதிர்வரும் காலத்தில் சம்பில்கடலுக்குள் ஏதும் மண்மேடுஇருந்தால் கோயில்கட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றும்இல்லை.எனவே புலம் பெயர்மக்களாகிய நாம் சமூகம் சார்திட்டங்களைமட்டுமே கவனத்தில்கொள்ளவேண்டும்.சுடலைக்குள் ஆலயம்கட்டியவர்களை அங்கேயே அவர்களது திட்டங்கள் தீ இடப்படவேண்டும். தீ இடப்படாவிட்டால் புலம்பெயர் மக்கள் நாம் இத்திட்டங்கள் தீ வைக்கவேண்டும்.நாங்கள் நினைத்தால் முடியும்.ஊரில் ஒரு சமூக ஆர்வலராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு பல நல்ல திட்டங்கள் இன்று பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க காரணகர்த்தா என்னிடம் கூறியவிடயம்.உங்கை இருந்து இஞ்சை ஊரிலை ஒண்டும் கிளிக்கேலாது என நான் கூறினேன் எங்கடை பணம் மட்டும் தேவை ஆனால் எங்களது ஆலோசனைகள் ஆராயமுடியாதா என்றேன் அவர் அதற்க்கு இஞ்சை அவங்கள் தான் ஆட்ச்சி அனுசரித்து போங்கோவன் என்றார்.நான் கேட்டேன் எப்ப பணிப்புலம் தனிநாடானது என்றேன்.பொதுவானவை பொதுவாக்கினால் தான் சுதந்திரமாக கட்டுமானம் முடியும்என்றால் முதல்வேலையாக பொதுவை பொதுவாக்குவோம் இதற்க்காய் என் பின்னே நிற்க்கும் அனைவருக்கும் நன்றிகள்.அம்மன் அருள்வாக்கும் அனுமதியும் கிடைத்துள்ளது பலரது கரங்கள் இணைக்கப்பட்டுள்ளது நிறைவே வெற்றி நிச்சயம். பணிப்புலம் அம்மன் ஆசி பெற்ற பணிப்புலம் தங்கராசா பாலகுமார் டென்மார்க்


                     பண்டத்தரிப்பு சாந்தையம்பதி
 அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
விகிர்தி வருட (2010)

அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

                                ஐங்கரனை மனமுருக தொழுமனமே உன்
                               ஐம்புலனும் ஐங்கரன் பாதத்தில் வைத்திடவே
                               நீர் கேட்தெல்லாம் அருள் தருவான்
                               சாந்தையூர் சித்தி விநாயகனே

சித்திவிநாகர் அடியார்களே,

                     திருமூலரால் சிவபூமியென போற்றப்பட்ட இலங்கை மாமணித்தீவின் வடபால் யாழ்ப்பாணத்தின் வடமேற்கு திசையில் தமிழும்,சைவமும் சிறப்புற்று ஓங்கும் மருதமா மண்ணாம் சாந்தையம்பதி என்னும் புண்ணிய N~~;திரத்தில் சித்திகள் தந்தருளும் சித்தி விநாயகப் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான விகிர்தி வருடம் ஆவணித்திங்கள் 15ம் நாள் (31.08.2010) செவ்வாய்க்கிழமை ஸ்ப்தமி ததியும் கார்த்திகை நட்சத்திரமும்,சித்தியேகமும் கூடிய சுபகாலத்தில் உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து ஆவணிச்சதிர்த்தி நன்னாளை (11.009.2010) இறுதி நாளாகக் கொண்டு 12 நாட்களும் அலங்கார உற்சவம் இடம்பெறுவதற்கு சித்திவிநாயகப் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.                                                மஹோற்சவ பிரதம குரு:
                    சிவசிறி போரின்பநாதக்குரக்கள் இன்பராஐக்குருக்கள்
                           (பணிப்புலம் முத்துமாரியம்பாள் பிரதம குரு)

                                                        ஆலயக்குரு:
                               சிவசிறி வே.பாலசுப்பிரமணிய ஐயா
                    (பணிப்புலம் முத்துமாரியம்பாள் தேவஸ்த்தானம்)

                                                     உதவிஅர்ச்சகர்;:
                               சிவசிறி பால வெங்கடேஸ்வர ஐயா


                          அலங்கார உற்சவ உபயகாரர் விபரம்
1ஆம் திருவிழா திரு.ப.விக்னேஸ்வரன் குடும்பம் (கனடா)
2ஆம் திருவிழா திரு.சி.வீரசிங்கம் (சாந்தை)
3ஆம் திருவிழா திரு.நானு றங்கநாதன் குடும்பம் (இத்தாலி)
4ஆம் திருவிழா திரு.வே,இராசையா குடும்பம் (சாந்தை)
5ஆம் திருவிழா திரு.இ.செல்லத்துரை குடும்பம் (சாந்தை)
6ஆம் திருவிழா திரு. விஐpயானந்தன் குடும்பம் (நேர்வே)
7ஆம் திருவிழா திரு.க. சிவப்பிரகாசம் குடும்பம் பணிப்புலம்)
8ஆம் திருவிழா திருமதி சி.இலங்கேஸ்வரி (காலையடி)
9ஆம் திருவிழா திரு. மு.குமாரசிவம் குடும்பம் (சாந்தை)
10ஆம் திருவிழா திரு.பூ.தனபாலசிங்கம் குடும்பம் (காலையடி)
11ஆம் திருவிழா சப்பறத்திருவிழா திரு.பொ.nஐயச்சந்திரன் குடும்பம் (இத்தாலி)
12ஆம் மஞ்சத்திருவிழா திரு.வ.சப்பிரமணியம் குடும்பம் (கனடா)

      பூமாலை அலங்காரம்                                                   மங்களவாத்தியம்
திரு.இராசலிங்கம் பரமேஸ்வரன்                        திரு சிவகுமார் குழவினர்

                  உற்சவ காலத்தில் ஆசார சீலர்களாக வருகை தந்து விநாயகர் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்......

                                                         சுபம்

சாந்தை,பண்டத்தரிப்பு                                                                         இங்ஙனம்
27.08.2010                                                                                             ஆலய பரிபால சபை


genga siva

to me, panippulam
show details 2:04 PM (3 hours ago)

வாணி விழாவை திறம்பட நடாத்துவதற்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு எமது நன்றிகள்.அத்தோடு விளம்பரதார நல் உள்ளங்களுக்கும்,இவ் விழாவை மக்கள் மத்தியில் விளம்பரபடுத்திய பணிப்புலம் டொட் கொம்,நியூஸ்நேசன் டொட் கொம்,பணிப்புலம் டொட் நெற் ஆகிய இணைய தளங்களிற்கும் எமது நன்றிகள். மீண்டும் புதுப்பொலிவுடன் பண் கலை பண்பாட்டுக்கழகம் பெருமையுடன் வழங்கும் நத்தார் புது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்,மற்றும் பல்வேறு நகைச்சுவை நிகழ்சிகளுடன் உங்களை மகிழ்விக்க தயாராகிக்கொண்டிருக்கின்றன.மறந்து விடாதீர்கள்.நடைபெறும் இடம்,நேரம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Reply
Reply to all
Forward
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக